ADVERTISEMENT
உடுமலை:உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஸ்குவாஷ் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.
பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் குடியரசு தினத்தையொட்டி நடத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளில், ஸ்குவாஷ் போட்டியும் உள்ளது. திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டி உடுமலை ஷருக் அகாடமியில் நடந்தது.
இதில் 6 முதல் 8 எட்டாம் வகுப்பிற்கான பிரிவில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிருந்தா, பிரகல்யா முதல் இடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை, ஆர்.கே.ஆர்., கல்விக்குழும தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!