ADVERTISEMENT
உடுமலை:பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில், நாட்டின நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
உடுமலை கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை சிகிச்சை வளாகம், பெதப்பம்பட்டியில் உள்ளது.
நேற்று வளாகத்தில், நாட்டின நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறை இணை பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் குமாரவேல், நாட்டின நாய்கள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு பேசினார்.
திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ரவிமுருகன், நாட்டின நாய்களின் சிறப்புகள் குறித்து பேசினார். நாட்டின நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் குமார், சாந்தகுமார் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
முகாமில், நாட்டின நாய்களுக்கு, இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
உதவி பேராசிரியர் இன்பராஜ் நன்றி தெரிவித்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!