Load Image
Advertisement

கவுன்சிலில் பேசவிடுவதில்லை; வார்டுகள் புறக்கணிப்பு! அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் மனு

 Do not speak in council; Ignore the wards! ADMK, Councilors Complaint Petition    கவுன்சிலில் பேசவிடுவதில்லை; வார்டுகள் புறக்கணிப்பு! அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் மனு
ADVERTISEMENT
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள், வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கப்படுகிறது,' என, நேற்று நடந்த நகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி நகராட்சியில், 1, 8, மற்றும், 19வது வார்டுகளில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள்முறையே, சாந்தி, ஜேம்ஸ்ராஜா, வசந்த் ஆகியோர் உள்ளனர். அவர்களது வார்டுகள்புறக்கணிப்பதாக நேற்று நடந்த நகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

மூன்று வார்டுகளிலும் சரிவர குடிநீர் வினியோகமில்லை. இதனால், வேலைக்கு செல்வோர் குடிநீர் பெறமுடிவதில்லை. குடிநீர் விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் மற்றும் சாதாரண நீர் குழாய்கள்உடைப்பு ஏற்பட்டால், சரி செய்ய நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், உடைப்பு ஏற்பட்ட இடங்களை தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.

தெருவிளக்கு பராமரிப்புகள் சரிவர செய்யப்படுவதில்லை. நகராட்சி கூட்டத்தில் விவாதித்தால், சரி செய்யப்படும் என நகராட்சி தலைவர் தெரிவிக்கிறார். ஆனால், பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய்களில் மண் அள்ளப்படுவதில்லை. செடிகள் அகற்றுதல் மற்றும் அடிப்படை வேலைகள் ஏதும் சரிவர நடைபெறுவதில்லை. எங்களது வார்டுகளில், ஏதாவது ஒரு பணிக்கு ஒப்பந்தம் கோரினாலும், அதை எடுக்கும் ஒப்பந்ததாரர் அந்த பணியை ஆண்டு கணக்கில் இழுத்தடிக்கிறார்.

எங்களது வார்டுகளில், ரோட்டில் வேகத்தடை மற்றும் 'பேட்ச் ஒர்க்' பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. உடுமலை ரோடு, டி.கோட்டாம்பட்டி மற்றும் வடுகபாளையத்தில் உள்ள ஹிந்துக்கள் மயானம் புதர் மண்டியுள்ளது.

நகராட்சி சார்பில் கொசு புகை மருந்து அடிப்பதில்லை. வார்டு பிரச்னைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

போராட ஆயத்தம்!



கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா கூறியதாவது: நகராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்ற வார்டுகளில், அடிப்படை வசதிகள், பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது

மக்களின் பிரச்னைகளை நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்றால், ஆளுங்கட்சியினர், தீர்மானங்கள் 'ஆல் பாஸ்' எனக்கூறி, மக்களின் பிரச்னைகளை கூட பேச விடாமல் கூட்டத்தை முடித்து விடுகின்றனர்.

வார்டு பிரச்னை குறித்து பலமுறை கடிதம் கொடுத்தும், நேரடியாக தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இதற்கு, 15 நாட்களுக்குள் சரி செய்வதாக நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால், அ.தி.மு.க., சாார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement