சவக்கிடங்கு அருகே குப்பை: போராட்ட அறிவிப்பால் பளீச்
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கு அருகே குப்பைகள் குவிந்து கிடப்பதை அகற்ற கோரி, மக்கள் போராட்டத்தில ஈடுபட போவதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கு அருகே, குப்பை தேங்கி கிடந்தன. அவை முறையாக அகற்றப்படாமல் இருந்ததால் கடும் துர்நாற்றம் வீசியது.
நேற்று முன்தினம், தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உறவினர்கள், உடலை வாங்க சவக்கிடங்கு அருகே காத்திருந்தனர்.
கடும் துர்நாற்றம் வீசியதை கண்ட அவர்கள், குப்பையை முறையாக அகற்றாவிட்டால் மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
அங்கு வந்த நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் குப்பையை முறையாக அகற்றுவதாக தெரிவித்தனர். தையடுத்து, குப்பை அகற்றப்பட்டு, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!