ADVERTISEMENT
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவுக்கு உட்பட்ட, ஐந்து ஊராட்சிகளுக்கு, ஜல் ஜீவன் மிஷன் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் சார்பில், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு மற்றும் உறுப்பினர்களுக்கு ஜல் ஜீவன் மிஷன் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.இந்த பயிற்சியை, கோவை மாவட்ட வள பயிற்றுனர்கள் சச்சிதானந்தம் மற்றும் ரவிகுமார் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக செயல் விளக்கம் அளித்தனர்.
இதில், கோடங்கிபாளையம், கோதவாடி, கோவில்பாளையம், கொண்டம்பட்டி, குளத்துப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இருந்து கலந்து கொண்டனர்.
இதில், ஒரு நபருக்கு, ஒரு நாளுக்கு, 55 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
இதை பூர்த்தி செய்ய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து தண்ணீர் வழங்குதல், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல், தண்ணீர் தன்மை அறிதல், மீட்டர் பரிசோதனை செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!