ADVERTISEMENT
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் செல்லும் தனியார் பஸ்கள், கிணத்துக்கடவு பஸ்ஸ்டாண்ட் வராமல், பாலத்தில் செல்வதால், பயணியர் அவதிப்பட்டனர்.
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்ல வேண்டும்.
இதில், ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் வராமல், மேம்பாலத்தில் செல்வதால், காத்திருக்கும் பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், சர்வீஸ் ரோட்டின் வழியாக அரசு பஸ் மட்டுமே, பஸ் ஸ்டாண்ட் வருவதால் அங்கு காத்திருக்கும் பயணியர் பஸ்களில் தொங்கியபடி செல்கின்றனர்.
இதில், குறிப்பாக சில தனியார் பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் வராமல் மேம்பாலத்தில் சென்று விடுகின்றன. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் காலை, மாலை நேரத்தில், மேம்பாலத்தில் பஸ் செல்வதால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
தனியார் பஸ்களின் விதிமீறல் பற்றி புகார் கிளம்பும் போது, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், இந்த பிரச்னை தொடர்கதையாகி வருகிறது.
இதை தவிர்க்க, பஸ் ஸ்டாண்ட் வராமல், மேம்பாலத்தில் செல்லும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பஸ் பயணியர் வலியுறுத்துகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!