தபால் அலுவலகங்களில் தொலைபேசி எண் வெளியீடு
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை போனில் அறிந்து கொள்ளும் வகையில், தொலைபேசி எண் வெளியிட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.
தபால் சேவை, அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் நேரத்துக்கு கிடைக்கச்செய்ய, தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.
அவ்வகையில், தபால் அலுவலகங்கள், காலை, 9:00 மணி முதலே, செயல்படுகிறது. திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில், மாலை, 7:00 மணி வரை, பணம் செலுத்த, பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தபால் பரிவர்த்தனைகளும் இரவு வரை மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர, தபால் துறை வாயிலாக வழங்கப்படும் சேவை மற்றும் செயல்பாடுகளை, வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில், அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, திருப்பூர் மாவட்ட தபால் அலுவலகங்களில், 'ஏதேனும் தகவல் மற்றும் விசாரணைகளுக்கு, அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல், தொடர்பு எண், அறிவிப்பாக வைக்கப்படுகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!