அரசு ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை:'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடக்க இருந்த மறியல் போராட்டம், டிச., 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற, அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, வரும் 25ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில், மறியல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 13ம் தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக, கடந்த 18ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, கடந்த 18, 19ம் தேதி நடக்க இருந்த, வாக்காளர் சிறப்பு முகாம்கள், வரும் 25, 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இம்முகாம்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பணியில் ஈடுபடுவோர், எந்த வகையிலும் விலக்கு பெற இயலாது. எனவே, வரும் 25ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் நடக்க இருந்த மறியல் போராட்டத்தை, டிச., 9ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!