ADVERTISEMENT
தேனி:தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலையில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.
சின்னமனுாரில் வசிப்பவர் காளீஸ்வரி. இவரது மகன் சதீஷ்குமார், 23. ஆட்டோ ஸ்பேர்ஸ் கடையில் பணிபுரிந்தார். நண்பர்களுடன் 19ம் தேதி தேனி வீரப்ப அய்யனார் மலைக்கோவிலுக்கு சென்றார். கோவில் அருகே உள்ள வலுக்குப்பாறைக்கு நண்பர்களுடன் நடந்து சென்றார்.
அங்கிருந்து 'செல்பி' எடுக்க முயன்றபோது தவறி விழுந்து தண்ணீர் சென்ற பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதில் தலை, உடல்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை நண்பர்கள் மீட்டனர். சதீஷ்குமார் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டாக தெரிவித்தனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!