தீபாவளி வசூல் 2 போலீசார் சஸ்பெண்ட்
அந்தியூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில், போலீசாராக பணிபுரிந்தவர்கள் வெங்கடேஷ் மற்றும் பூமாலை.
இவர்கள், தீபாவளி பண்டிகையின்போது அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதி உணவகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக, ஈரோடு எஸ்.பி., ஜவஹருக்கு புகார் சென்றது.
இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய, கோவை சரக டி.ஐ.ஜி., சரவணகுமாருக்கு எஸ்.பி., ஜவஹர் பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்ய, டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு, வெங்கடேஷ் சித்தோடு ஸ்டேஷனுக்கும், பூமாலை ஆப்பக்கூடல் ஸ்டேஷனுக்கும் இடமாறுதல் பெற்றிருந்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!