ADVERTISEMENT
பந்தலுார்:நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நக்சல்களின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகள் கேரள எல்லையில் அமைந்துள்ளன. இதை ஒட்டிய, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கண்ணனுார் பகுதிகளில் நக்சல்கள் முகாமிட்டு உள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன்னர் வயநாடு பகுதியில் நக்சல் மற்றும் அதிரடிப்படை போலீசார் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில், நக்சல்கள் உண்ணிமாயா, சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோழிக்கோடு பகுதியில் நக்சல் இயக்கத்தை சேர்ந்த அனீஸ் பாபு என்பவரையும் போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
கண்ணனுார் பகுதியில் நடந்த மோதலின்போது, தப்பிச் சென்ற சுந்தரி மற்றும் லதா ஆகிய இருவரையும் தேடப்படும் தீவிரவாதிகளாக கேரள போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் தேடப்படும் நக்சல் இயக்கத்தை சேர்ந்த, 27 பேரின் படங்களை வெளியிட்ட நீலகிரி போலீசார், சேரம்பாடி போலீஸ் ஸ்டேஷன், தேவாலா உட்கோட்ட பகுதியில், இந்த அறிவிப்பை காட்சிபடுத்தி உள்ளனர்.
அதில், நக்சல் குறித்த தகவல் அறிந்தால் தகவல் தர தொலைபேசி, மொபைல் போன் எண்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும், நீலகிரி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் இவை ஒட்டப்பட்டு, தீவிர வாகன சோதனை பணியும் நடந்து வருகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!