மனைவி குளிப்பதை படமெடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட கணவர்
சென்னை:சென்னை, கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ், 30. இவருக்கும், 20 வயது பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
லோகேஷ் தன் மொபைல்போனில், மனைவியின் அரை நிர்வாண படங்களை வைத்துள்ளார். ஓரிரு மாதங்களுக்கு முன் இதைப் பார்த்த மனைவி, இதுகுறித்து லோகேஷிடம் கேட்டுள்ளார். அப்போது, படங்களை யாருக்கும் அனுப்பாமல், தான் மட்டும் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின், மீண்டும் இதுபோல் அடிக்கடி அரை நிர்வாண படம் எடுக்கவே, ஆத்திரமடைந்த அவரது மனைவி, எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் லோகேஷை அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், தன் மனைவி குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் அரை நிர்வாணமாக படம் எடுத்ததோடு, மனைவியின் மொபைல்போன் வாயிலாக,'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சமீபத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, எம்.கே.பி.,நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், அவர் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!