Load Image
Advertisement

சிறுவாபுரியில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் ஆக்கிரமிப்பு கடைகளால் ஏற்படும் சிரமம்

 Devotees stuck in Siruvapuri are inconvenienced by encroaching shops    சிறுவாபுரியில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் ஆக்கிரமிப்பு கடைகளால் ஏற்படும் சிரமம்
ADVERTISEMENT
சிறுவாபுரி:சிறுவாபுரியில், தரிசனம் செய்யும் நேரத்தைவிட கோவிலுக்கு வெளியே ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட அதிக நேரம் ஆகிறது என பக்தர்கள் புலம்பி வருகின்றனர்.

அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் இருசக்கர பார்க்கிங்கை முறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விேஷச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.

அங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசல் மட்டுமே என்பது மறுப்பதற்கு இல்லை.

குறுகிய சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள் மற்றும் அதை ஒட்டி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அங்குள்ள பூக்கடைகள் சாலையை ஆக்கிரமித்தும், காய்கறி கடைகள் கோபுர நுழைவாயலை ஆக்கிரமித்தும் வைத்திருப்பதால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், கோவிலுக்கு சென்று வரும் நிலை தொடர்கிறது.

வரிசையில் நின்று சிறுவாபுரி முருகனை தரிசிக்கும் நேரத்தை விட, கோவில் வெளிபுறத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட அதிக நேரம் ஆகிறது என பக்தர்கள் புலம்புகின்றனர்.

சாலை மற்றும் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகள், கண்ட இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆரணி போலீசாரும், கோவில் நிர்வாகமும் முறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement