ADVERTISEMENT
நவம்பர் 22, 2016
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், சந்திரகுப்தம் எனும் ஊரில், 1930, ஜூலை 6ல் பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் முரளிகிருஷ்ணா.
தந்தை புல்லாங்குழல் கலைஞர், தாய் வீணை இசைக் கலைஞர். இவரை, தியாகராஜரின் மாணவர் பரம்பரையில் நான்காவதாக இருந்த பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம் இசை கற்க, பெற்றோர் அனுப்பினர்.
இவரது திறமையைக் கண்ட, ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயணமூர்த்தி, இவருக்கு, 'பால' எனும் முன்னொட்டை சேர்த்ததால், பாலமுரளிகிருஷ்ணா ஆனார். சிறுவயதிலேயே சென்னை வானொலி நிலைய, 'ஏ கிரேடு' கலைஞரானார்.
புல்லாங்குழல், வீணை, மிருதங்க கருவிகளையும் வாசிக்க வல்லவர். 72 மேளகர்த்தா உருப்படிகளையும், புதிய ராகங்களையும் உருவாக்கினார். தமிழ், தெலுங்கு, மலையாள சினிமா பாடல்களுக்கு இசையமைத்து, 400க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடினார். 'ஒருநாள் போதுமா... சின்னக்கண்ணன் அழைக்கிறான்...' உள்ளிட்ட இவரின் பாடல்கள் என்றும் இனியவை.
'பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி, பத்மவிபூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன், 86வது வயதில், 2016ல் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!