உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராம ஜென்மபூமி தீர்த்த கேந்திரம் சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை வரும் ஜனவரி 22ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க, உலகம் முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையொட்டி, ராமர் கோவில் அருகே மஜ்ஹா குப்தர் காட், பாஹ் பிஜேஷி, பிரஹம்மகுந்த் தில் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தங்கும் வகையில் 30,000 கூடாரங்களும், 35 பெரிய கூடாரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஹ் பிஜேஷி, மஜ்ஹா குப்தர் காட் ஆகிய பகுதிகளில் தலா 25,000 பேர் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
வாசகர் கருத்து (4)
மக்கள் தங்கும் கூடாரங்களில் எந்த ஒரு விபத்தோ அல்லது அசம்பாவிதங்களோ நடை பெறாமல் ராம பக்தர்களின் பாதுகாப்பில் உத்திரபிரதேச அரசு முழுக்கவனம் செலுத்த வேண்டும்.குஜராத் கோத்ரா சம்பவம் நினைவில் இருக்கட்டும். கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். பக்தர்களுக்காக விடப்படும் இலவச வந்தே பாரத் ரயில் பயணங்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு அவசியம். திரு அண்ணாமலை அவர்கள் இந்த பக்தர்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். இம்மாதிரி அதி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு ஒன்றே முக்கியம். நல்லபடியாக ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வாழ்த்துக்கள்
அங்கே சமூக விரோத சக்திகள், சனாதன எதிர்ப்பு சக்திகள் கூடாரம் 'போடாமல்' பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பும் அரசினுடையது.
ஜெய் ஶ்ரீ ராம்
இந்திய மக்களின் பாசத்திற்குரிய மாண்புமிகு யோகி ஜி அவர்களின் ஆட்சியில் ஸ்ரீராம் கோவிலின் புனரத்ன நடைபெற இருப்பது ஒரு சகாப்தம். இந்திய மக்களின் ஆறு நுறு ஆண்டுகளின் கனவு உண்மையாக போகிறது. ராமர் கோயில் திறப்பு விழா அருமையாக நடைபெற அனுமனும், லட்சுமணனும் துணை இருப்பர்.