Load Image
Advertisement

ஆற்றுபாலத்தில் இணைப்பு சாலையை சீரமைக்க கிராம வாசிகள் எதிர்பார்ப்பு

 The villagers are expecting the repair of the connecting road to the river bridge   ஆற்றுபாலத்தில் இணைப்பு சாலையை சீரமைக்க கிராம வாசிகள் எதிர்பார்ப்பு
ADVERTISEMENT
பொன்னேரி:பொன்னேரி அடுத்த கம்மார்பாளையம் - மனோபுரம் கிராமங்களுக்கு இடையே உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே, கடந்த, 2019ல், நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 2.18 கோடி ரூபாயில், பாலம் அமைக்கப்பட்டது. இதன் வழியாக, கிராமவாசிகள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாலத்தின் மனோபுரம் பகுதியில் உள்ள இணைப்பு சாலை சேதம் அடைந்துள்ளது. கரடு முரடாக இருக்கும் இணைப்பு சாலை வழியாக பாலத்தை அடைவதற்குள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.

மேலும், பாலத்தின் ஒரு பகுதியில் தடுப்பு சுவர் உடைந்து உள்ளது. இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் நிலை தடுமாறுகின்றன. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக இதே நிலை தொடர்கிறது.

நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய ஒன்றிய நிர்வாகம், இதில் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டுவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். துரித நடவடிக்கையாக மேற்கண்ட ஆற்றுப்பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement