Load Image
Advertisement

கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை

 Sewer repair request    கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
ADVERTISEMENT
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு தக்கோலம் நெடுஞ்சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் தலா, 400 மீட்டர் துாரத்திற்கு கழிவுநீர் கால்வாய், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

தற்போது இந்த கால்வாய் ஆங்காங்கே துார்ந்துபோய் அடைப்பு ஏற்பட்டு சேதமடைந்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதில் உருவாகும் கொசுவால் இந்த பகுதியில் நோய்தொற்று பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். இந்நிலையில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement