Load Image
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

 Speech, interview, report    பேச்சு, பேட்டி, அறிக்கை
ADVERTISEMENT
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி:திருவண்ணாமலையில் விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது போல, மற்றொரு விவசாயி அருள் மீதான குண்டாசையும் அரசு ரத்து செய்ய வேண்டும். மக்கள், நியாயமான கோரிக்கைகளுக்கு எங்கு வேண்டுமானாலும் போராடலாம். அதன் உண்மைத்தன்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்படி அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுகின்றனர்.

இவங்க கட்சிக்காரங்க தான் அடிக்கடி சுங்கச்சாவடிகளை அடிச்சு நொறுக்குவாங்க... அதையும் சந்தடி சாக்குல சேர்த்து நியாயமான கோரிக்கைன்னு சொல்றாரோ?



மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி: கவர்னர் ரவி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கிறார். கவர்னர் பதவி தேவையற்றது. இவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் எந்த அதிகாரமும் வழங்கவில்லை. தபால்காரர் வேலையைத்தான் பார்க்க வேண்டும்.
'இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கவர்னர் பதவியை ஒழிப்போம்'னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்!

அ.தி.மு.க., மருத்துவ அணி, மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: கடந்த ஆட்சியில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, பழனிசாமி மருத்துவ புரட்சி செய்தார். தற்போது அரசு மருத்துவமனைகளில், உயிர்காக்கும் மருந்துகள் இல்லை என்கின்றனர்; சாதரண மருந்துகள் தான் இருப்பு வைத்துள்ளனர். 'பிப்ரசிலின், மீரோபினம், டாசோபாக்டம்' போன்ற மருந்துகள் இல்லை எனக் கூறி, மருந்து கடைகளில் மக்களை வாங்கி வர சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மருந்து, எந்த வியாதிக்குன்னு பாமர மக்களுக்கு தெரியாது... மழைக் காலத்துல வேகமா நோய் பரவும் நேரத்துல இப்படி பீதியை கிளப்பாதீங்க!

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை: அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி, மக்களை வாழ முடியாத அளவிற்கு நெருக்கடியில் தத்தளிக்க வைத்த தி.மு.க., அரசு, விவசாயிகளையும் தற்போது ஒடுக்க நினைக்கிறது. பல முனை எதிர்ப்பால், செய்யாறு சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை அரசு ரத்து செய்தது. உண்மையில் அக்கறை இருக்குமானால், விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

இதெல்லாம் முழுக்க அரசியல் மட்டும் தான்... அக்கறை துளியும் இல்லைன்னு விவசாயிகளுக்கே நல்லா தெரியும்!


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement