ADVERTISEMENT
சென்னை:சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த பாலு, உஷாராணி தம்பதிக்கும், அருகில் வசிக்கும் வெங்கடேசன், 39, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதில், ஏற்பட்ட தகராறில், கண்ணகிநகர் போலீசார் இருதரப்பையும் விசாரித்து, எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. பக்கத்து வீட்டை சேர்ந்த குமார், 39, என்பவர் இருதரப்பையும் தடுக்க முயன்றார். ஆத்திரமடைந்த வெங்கடேசன், குமாரின் விலாவில் கத்தியால் குத்தினார்.
தடுக்க முயன்ற மனைவி ஜெனிபர், மகள் அர்ச்சனா ஆகியோரையும் தாக்கினார். மூன்று பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்ணகிநகர் போலீசார், வெங்கடேசன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து, நேற்று கைது செய்தனர். கத்தி எடுத்து கொடுத்தது தொடர்பான புகாரில், வெங்கடேசன் மனைவி ராதிகாவிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!