Load Image
Advertisement

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு சாகும் வரை சிறை

சென்னை:வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 11 வயதான சிறுமி, தன் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், 2021ல் பாட்டிக்கு தெரிந்த வாலிபர், வீட்டில் இருந்த சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் கர்ப்பமான சிறுமிக்கு, குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்தது. இது குறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.

விசாரணைக்கு பின், குற்றத்தை மறைத்த சிறுமியின் தாய், அவரது தோழி, 35 வயதான வாலிபர் ராஜா, அவரது தாய் ஆகிய நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:

சிறுமியின் தாய், அவரது தோழி, ராஜாவின் தாய் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். ராஜா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே, அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்குவதோடு, தமிழக அரசு இழப்பீடாக 15 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement