Load Image
Advertisement

டவுட் தனபாலு

 Dout Dhanapalu    டவுட் தனபாலு
ADVERTISEMENT
லண்டனில் உள்ள பென்னிகுவிக் கல்லறையில் அஞ்சலி செலுத்திய, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: இங்குள்ள சேதமடைந்த பென்னிகுவிக் சிலையை பராமரிக்க போவதாக கூறிய தி.மு.க., அரசு, அதற்கான நிதியை தரவில்லை; இது, சர்ச் தரப்பில் எனக்கு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., அரசு பராமரிக்காவிட்டால், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அனுமதி பெற்று, நானே பராமரிக்க தயாராக உள்ளேன்.

டவுட் தனபாலு: லண்டன்ல இருக்கிற பென்னிகுவிக் சிலையை யார் கண்டுக்க போறாங்கன்னு, தி.மு.க., அரசு அலட்சியமா இருந்திருக்கும்... நீங்க போயிட்டு வந்து, உண்மையை போட்டு உடைச்சுட்டீங்கல்ல... இனி, சிலை பராமரிப்பு பணிகள், மின்னல் வேகத்துல நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
ஒரு தாய், தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் விகிதம், 20 ஆண்டுகளுக்கு முன், 2.1 என்ற அளவில் இருந்தது. தற்போது, தமிழகத்தில், 1.4 என்ற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. நாட்டிலேயே மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. '2031 - 36 காலங்களில் இவை மேலும் கட்டுக்குள் வரும்' என, இந்திய சென்செக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

டவுட் தனபாலு: திராவிட கட்சிகள் ஆட்சியில நடந்த இந்த சாதனையை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்... அதே நேரம், மக்கள் தொகை குறைவு அடிப்படையில, நமக்கான எம்.பி., தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை தடுக்கணும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!



தமிழக காங்., தலைவர் அழகிரி:
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், 15 தொகுதிகளில், பூத் கமிட்டி பயிற்சி பாசறை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. வரும் 25, 26ம் தேதிகளில், திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பயிற்சி பாசறை கூட்டம் நடக்கவுள்ளது. டிச., 6ல் தர்மபுரி தொகுதியிலும், 10ல் ஈரோடு தொகுதியிலும் நடக்கவுள்ளது.

டவுட் தனபாலு: நடத்துங்க... நடத்துங்க... ஆனா, தி.மு.க., தரப் போகும் ஒற்றை இலக்க சீட்களுக்காக, ஒட்டுமொத்த தொகுதிகள்ல இருக்கிற கட்சியினரையும் படுத்தி எடுக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!




வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement