Load Image
Advertisement

பலனை அனுபவிக்க வேண்டும்!

 Enjoy the benefits!    பலனை அனுபவிக்க வேண்டும்!
ADVERTISEMENT
'துணை முதல்வராக இருந்து என்ன பயன்; எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையே...' என புலம்புகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான அஜித் பவார்.

இம்மாநிலத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான, சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.,க்களை இழுத்து வந்து, ஆளுங்கட்சி கூட்டணியில் ஐக்கியமானார், அஜித் பவார். சேர்ந்த கையோடு, அவருக்கு துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகள் தரப்பட்டன.

துவக்கத்தில் மகிழ்ச்சியில் திளைத்தாலும், போகப் போக பொறுமை இழந்து விட்டார், அஜித் பவார். 'ஏற்கனவே பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக உள்ளார். இரண்டாவது துணை முதல்வரான எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

'நிதி அமைச்சர் பதவி இருந்தாலும், எந்த முக்கிய முடிவையும் என்னால் எடுக்க முடியவில்லை. ஏக்நாத் ஷிண்டே, பட்னவிஸ் ஆகியோர் தான், முடிவுகளை எடுக்கின்றனர். என்னுடன் வந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு எந்த சலுகையும் செய்து கொடுக்க முடியவில்லை...' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி தள்ளுகிறார், அஜித் பவார்.

சரத் பவாரோ, 'அஜித் பவார் எனக்கு பலமுறை துரோகம் செய்து விட்டார். ஒவ்வொரு முறையும், அதற்கான பலனை அனுபவித்து விட்டு, என்னிடம் ஓடி வந்து விடுவார். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது...' என, கிண்டலாக கூறுகிறார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement