Load Image
Advertisement

டிபாசிட் பணமாவது தேறுமா?

 Do you want a deposit?    டிபாசிட் பணமாவது தேறுமா?
ADVERTISEMENT
தமிழகம் முழுதும், 'டாஸ்மாக்' கடைகளில் பார் நடத்த அரசு டெண்டர் அறிவித்தது. பணம் கொழிக்கும் என்பதால், ஏற்கனவே பார் நடத்தியவர்களும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும் போட்டி போட்டு, 'டிபாசிட்' கட்டி, டெண்டருக்கு விண்ணப்பித்தனர்.

கடந்த மாதம், 7ம் தேதி அறிவித்து, பின், 27ம் தேதிக்கும், இந்த மாதம், 1ம் தேதி, 9ம் தேதி என, டெண்டர் தேதியை மாற்றி மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, 'டாஸ்மாக் நிர்வாகமே பார் நடத்த இடம் தர வேண்டும்' என, ஒரு கோஷ்டியும், காலி பாட்டில் எடுப்பதற்கான டெண்டர் தொடர்பாக மற்றொரு கோஷ்டியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, பார் டெண்டரை தற்காலிகமாக ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதனால், டெண்டர் எடுக்க போட்டி போட்டவர்கள், தற்போது, 'நம்ம டிபாசிட் பணமாவது திரும்ப கிடைக்குமான்னு தெரியலையே...' என, புலம்பி தவிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement