Load Image
Advertisement

புதிய சமையலறை கூடம் பயனின்றி வீணாகும் அவலம்

 A new kitchen is a waste of time    புதிய சமையலறை கூடம் பயனின்றி வீணாகும் அவலம்
ADVERTISEMENT
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில், நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 65 மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு, சமையல் கூடம் பழுது காரணமாக, புதிதாக, 7.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சமையலறை கூடம் கட்டப்பட்டது. இதை, இரண்டு மாதங்களுக்கு முன், மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்தனர்.

தற்போது, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு இன்றி உள்ளது. மேலும், கதவு, ஜன்னல் சரியான முறையில் பொருத்தப்படாமல் உள்ளது.

தற்சமயம் வரை, மூன்று வகுப்பறை கட்டடம் கொண்ட கட்டடத்தின் ஒரு வகுப்பறையில், காஸ் சிலிண்டர் வைத்து, சமையல் செய்து, பள்ளி மாணவ - மாணவியருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, துறை சார்ந்த அரசு அதிகாரி கள், சமையல் கூடத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement