கல்லுாரி மாணவர்களுக்கு கடன் மேளா
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் அடுத்த எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தின.
கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, 204 மாணவ -- மாணவியருக்கு, 13.93 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி கடன்களை வழங்கினார்.
மாணவ -- மாணவியர் இவற்றை பயன்படுத்தி, நன்கு படித்து தொழில் முனைவோராக மாற வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மகளிர் திட்ட இயக்குனர் மணி, நகர சபை தலைவர்கள் சண்முகம், கார்த்திக், காட்டாங்கொளத்துார் ஒன்றிய குழு தலைவர் உதயா, மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் உட்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!