சுற்றுலா வழிகாட்டி அங்கீகாரம் இணைய பதிவிற்கு அறிவிப்பு
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்லவர் கால சிற்பங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சர்வதேச பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள், ஆன்மிக தலங்கள் உள்ளன.
இப்பகுதிகளில், பயண முகவர், சுற்றுலா இயக்குபவர், வழிகாட்டி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களில், ஏராளமானோர் ஈடுபட்டு உள்ளனர்.
அத்தகைய தொழில் முனைவோருக்காக, தமிழக அரசு சுற்றுலா இயக்குபவர்கள் - பதிவுகள் - திட்டம் 2023ஐ, கடந்த சர்வதேச சுற்றுலா தினத்தில் துவக்கியது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி, தொழில் முனைவோருக்கு அங்கீகாரம் வழங்கவும் முடிவெடுத்துள்ளது.
அரசிடம், அவர்கள் முறையான உரிமம் பெற, https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில், அவசியம் பதியுமாறு கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, சுற்றுலா அலுவலகம், மாமல்லபுரம், 044 2744 2232, 91769 95869 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!