Load Image
Advertisement

26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: குட்கா வழக்கில் தொடர்பு

 26 changes to police waiting list: Gutka case connection?   26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: குட்கா வழக்கில் தொடர்பு
ADVERTISEMENT
சென்னை: குட்கா தொடர்பான வழக்கில் சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 26 பேலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

ஆவடி காவல் ஆணையரக சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் குட்கா குறித்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 போலீசார் என 26 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் குட்கா விற்பனை செய்வோர் மற்றும் துணைபோகும் காவலர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என ஆணையர் தெரிவித்து உள்ளார்.


வாசகர் கருத்து (1)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 பேரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் சம்பளம் உண்டா கிடையாதா? இந்தமாதிரி மாட்டும் போலீசாருக்கு ஐந்தாண்டு இன்கிரிமெண்ட் பத்தாண்டுகள் பிரமோஷனை கட் பண்ணனும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement