Load Image
Advertisement

ஓ.எம்.ஆர்., ஆறுவழிச்சாலை சந்திப்புகளில் இருள் உயர் மின் விளக்குகள் அமைப்பது எப்போது?

 OMR, when to install dark high voltage lights at six-lane junctions?    ஓ.எம்.ஆர்., ஆறுவழிச்சாலை சந்திப்புகளில் இருள் உயர் மின் விளக்குகள் அமைப்பது எப்போது?
ADVERTISEMENT
திருப்போரூர்:சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை, 42 கி.மீ., தொலைவுக்கு, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியின் போது, இச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டு, சிறுசேரி சிப்காட் பூங்கா வரை ராஜிவ்காந்தி சாலையாக பெயர் சூட்டப்பட்டது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.

சாலை விரிவாக்கம் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் காரணமாகவும், மென்பொருள் நிறுவனங்களின் வருகை காரணமாகவும், இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள், நுாற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்தன.

எனவே, கடந்த 2011ம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் 110 விதியின் கீழ், சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக பூஞ்சேரி வரை, உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதில், படூர் -- தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் -- ஆலத்துார் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, படூர் -- தையூர் இடையிலான புறவழிச்சாலை, 4.67 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருப்போரூர் -- ஆலத்துார் இடையிலான புறவழிச் சாலை, 7.45 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.

இரண்டு புறவழிச் சாலைகளுக்கும் சேர்த்து, மொத்தம் 465 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், திருப்போரூர் -- ஆலத்துார் இடையில் நடைபெறும் புறவழிச்சாலை பணி, 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது.

காலவாக்கத்தில் ஓ.எம்.ஆர்., சாலை,- திருப்போரூரில் நெம்மேலி சாலை-, வெங்கலேரியில் ஓ.எம்.ஆர்., சாலை ஆகியவை, -ஆறுவழிச்சாலையுடன் இணைகின்றன.

இந்த மூன்று சந்திப்புகளிலும், சிறிய மற்றும் பெரிய அளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பகுதிகளில், கனரக வாகனங்கள் உட்பட ஏராளாமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இரவு நேரத்தில், இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

வாகன ஓட்டிகளின் நலன் கருதி, முதற்கட்டமாக, ரவுண்டானா மத்தியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement