Load Image
Advertisement

ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி செய்யுங்க! விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

உடுமலை:விவசாயிகள், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி செய்ய, தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னையில் கூடுதல் வருமானத்துக்காகவும், உரத்துக்காகவும் ஊடுபயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

பலர், கோகோ பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யும் நிலையில், ஜாதிக்காய் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:

தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படும் ஜாதிக்காயில், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து பயன்பெறலாம்.

ஜாதிக்காய் நறுமணமூட்டும் மரவகையாகும். ஜாதிக்காயில் இருந்து கொட்டை மற்றும் ஜாதிபத்ரி என்ற இரு நறுமண பொருட்கள் பெறப்படுகிறது. இந்தியாவில், ஆண்டுக்கு, 4,540 டன் ஜாதிக்காய் கொட்டை தேவையுள்ளது; ஆனால், 2,150 டன் மட்டுமே உற்பத்தியாகிறது. ஜாதிபத்ரியும் தேவையான 760 டன்னுக்கு 300 டன்கள் உற்பத்தியாகிறது.

தமிழகத்தில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை வாயிலாக, பரப்பு விரிவாக்கத்திட்டத்தில் ஜாதிக்காய் நாற்றுகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, 1,500 முதல், 1,800 கிலோ காய்களில், மூன்று முதல் 10 கிலோ ஜாதிக்காய் கொட்டையும், 1,400 முதல்- 1,500 கிராம் ஜாதிபத்ரியும் கிடைக்கும்.

மேலும் ஜாதிக்காயில் இருந்து பழச்சாறு, ஜெல்லி மற்றும் ஊறுகாய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement