Load Image
Advertisement

மழைக்கால தொற்று அச்சமா? புகார் தெரிவிக்க அறிவுரை

உடுமலை;அடுத்தடுத்து மழை அறிவிப்பு, பருவ கால தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமுடன் இருக்க, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை, பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து வருவதால், காலநிலை மாற்றம் காரணமாக சளி, காய்ச்சல், தலை, உடல்வலி உடல்சோர்வு பாதிப்பு பலருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், டெங்கு, இன்புளூயன்சா, டைபாய்டு காய்ச்சல் பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கைகளை திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.

அதன்படி, மாவட்டத்தின் ஒவ்வொரு ஊராட்சிகளில் ஒரு சுகாதார அலுவலர், நகரங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அலுவலர், மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார அலுவலர்களுக்கு பொறுப்பு வழங்கி தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், காய்ச்சல் கண்காணிப்பு பணி மேற்கொள்கின்றனர். தவிர, லார்வா வாயிலாக கொசு பரவல் அதிகரிக்காமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'காய்ச்சல் பாதிப்பு, கொசு பரவல் அதிகளவில் இருந்தால், குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள், 87544 - 48477 அல்லது 94443 - 40496 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

புகாரின் பேரில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல் குறித்த சந்தேகம் மற்றும் ஆலோசனைகளுக்கு, 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement