சுற்றுச்சுவர் இல்லாததால் கோர்ட் ஊழியர்கள் அச்சம்
வால்பாறை:வால்பாறை கோர்ட்டுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கோர்ட் ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில், பல ஆண்டுகளாக நீதிமன்ற கட்டடம் இல்லாத நிலையில், கோ - ஆப்ரேடிவ் காலனியில் வாடகை கட்டடத்தில் கோர்ட் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த, 2012ம் ஆண்டு வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, புதிய நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புடன் திறக்கப்பட்டது.
உயரமான இடத்தில் அமைந்துள்ள 'கோர்ட்' வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பகல் நேரத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், இரவு நேரத்தில் சிறுத்தையும் கோர்ட் வளாகத்தில் ஓய்வெடுக்கிறது. இதனால், கோர்ட் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வக்கீல்கள் கூறியதாவது:
வால்பாறையில் தற்போது செயல்படும் நீதிமன்ற கட்டடத்தில், போதிய வசதிகள் இருந்தாலும், சுற்றுச்சுவர் இல்லாததாலும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டத்தால், இரவு நேரத்தில் கைதிகளை கோர்ட்க்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சுற்றுச்சுவர் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!