Load Image
Advertisement

தேசிய நுாலக வாரவிழா பள்ளியில் கொண்டாட்டம்

 National Literature Week Celebration at School    தேசிய நுாலக வாரவிழா பள்ளியில் கொண்டாட்டம்
ADVERTISEMENT
வால்பாறை:வால்பாறையில் உள்ள பள்ளிகளில், தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டது.

தேசிய நுாலக வாரவிழாவை முன்னிட்டு, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நுாலகத்தில், நடந்த நுாலக வார விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமைவகித்தார்.

விழாவில், பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, விரும்பிய நுால்களை படித்தனர்.

ஆசிரியர்கள் பேசும்போது, 'வீட்டிலும், வெளியிடங்களிலும், மாணவர்கள் மொபைல்போனில் நேரத்தை வீணடிக்காமல், நுாலகத்தில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற நுால்களை படித்து பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, அன்றாடம்செய்தித்தாள்களை தவறாமல் படிக்க வேண்டும். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு, நுாலகங்களில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் நுாலகங்களை தவறாமல் பயன்படுத்தி, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement