கஞ்சா விற்றவர் சிக்கினார்
எம்.ஜி.ஆர்., நகர்:எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலைய எல்லையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நகர், புகழேந்தி தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற நபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா சிக்கியது.
விசாரணையில், பிடிபட்ட நபர், ஜாபர்கான்பேட்டை வீதி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜ், 45, என்பது தெரிய வந்தது. இவர், விசாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து வாயிலாக கோயம்பேடிற்கு கஞ்சா கடத்தி வந்து, சமூக வலைதளமான 'வாட்ஸாப்'பில் குழு அமைத்து, கஞ்சா விற்பனை மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.இவரிடம் இருந்து 2 கிலோ கிஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!