ADVERTISEMENT
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, கீழ்வீராணம் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் இளங்கோ, 29. இவர், 2017ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் காலை ஸ்பெளண்டர் பிளஸ் இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
இரவு, 9:30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருந்தார். அப்போது பனப்பாக்கம்--- பொன்னப்பன் தாங்கல் நெடுஞ்சாலை கல்பாணாம்பட்டு முந்திரி தோப்பு அருகே வந்த போது இளங்கோ, வாகனத்துடன் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் மூலம் நெமிலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இளங்கோ இறந்தார்.
இளங்கோவிற்கு, சந்தியா, 23 என்ற மனைவி, ஒரு வயதில் மகன் உள்ளனர். விபத்து குறித்து நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!