அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி ஐந்து மாடுகள் பலி
சோழவரம்:சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தியா, 32.
இவரது எருமை மாடுகள் நேற்று முன்தினம், பூதுார் கிராமத்தின் அருகில் உள்ள ஒரக்காடு சாலையில் மேய்ச்சலுக்கு சென்றன.
இரவு, 7:00மணிக்கு, பலத்த மழை பெய்தபோது, அங்கிருந்த மின் ஒயர் ஒன்று அறுந்து கீழே விழுந்தது. மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கின.
இதில், ஐந்து எருமை மாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தன. தகவல் அறிந்த மின்வாரியத்தினர், உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்தனர்.
சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!