Load Image
Advertisement

பெரியபாளையத்தில் சுகாதார சீர்கேடு: நோய் அபாயம்

 Sanitation in Periyapalayam: Risk of disease    பெரியபாளையத்தில் சுகாதார சீர்கேடு: நோய் அபாயம்
ADVERTISEMENT
பெரியபாளையம்:எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ளது பெரியபாளையம் ஊராட்சி. இங்கு, 9 வார்டுகளில், 10,000திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது. இங்கு போலீஸ் நிலையம், கூட்டுறவு கடன் சங்கம், வங்கி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.

பெரியபாளையம் ஊராட்சியை ஒட்டி ஆரணி ஆற்று மேம்பாலத்தின் மறுபகுதியில் உள்ளது ஆத்துப்பாக்கம் ஊராட்சி. இங்கு புகழ்பெற்ற பவானியம்மன் கோவில், அரசு மேனிலைப் பள்ளி, வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பவானியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் பெரியபாளையம் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மேம்பாலத்தை கடந்து கோவிலுக்கு செல்கின்றனர். இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.

ஆனால் முறையாக அகற்றுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, பெரியபாளையம் போலீஸ் நிலையம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, அரசு பள்ளிக்கு செல்லும் சாலையில் குப்பை எடுக்காமல் குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், குப்பை மழைநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதில் கொசுக்கள் உருவாகி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது மாநிலம் முழுதும் காய்ச்சல் பரவி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆங்காங்கே மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement