Load Image
Advertisement

திரூரில் கூட்டுறவு அருங்காட்சியகம் கைத்தறி துறை அமைச்சர் தகவல்

திருவள்ளூர்:திரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், 18.99 லட்சம் ரூபாய் செலவில் கூட்டுறவு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக, கைத்தறி துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

திருவள்ளூரில், 70வது கூட்டுறவு வார விழா கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது.

கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்து 2 ஆயிரத்து 825 பயனாளிகளுக்கு, 21.85 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:

இந்தியாவிலேயே முதல் முறையாக, திருவள்ளூர் மாவட்டம் திரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது.

தற்போது மாவட்டத்தில் 122 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

முதல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கமான திரூரில், 18.99 லட்சம் ரூபாய் செலவில் கூட்டுறவு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டுறவு துறை சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவ -மாணவியரிடையே நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, பரிசு வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement