Load Image
Advertisement

மணவாளநகரில் செயல்படாத சிக்னல்களால் வாகன ஓட்டிகள் அவதி

 Motorists suffer due to non-functioning signals in Manawalanagar    மணவாளநகரில் செயல்படாத  சிக்னல்களால் வாகன ஓட்டிகள் அவதி
ADVERTISEMENT
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர். இப்பகுதியில் திருவள்ளூர், சென்னை, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதி உள்ளது.

இந்த சந்திப்பு பகுதி வழியே சென்னை, திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து, கனரக இலகு ரக வாகனம், இரு சக்கர வாகனம் என தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

மேலும் போக்குவரத்து போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் 1போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement