வீட்டிற்குள் மயங்கி கிடந்த முதியவர் மீட்பு
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் நகதர், 65. இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தனர். நகதர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு, 10:00 மணிக்கு நகதர் வீட்டின் வெளிக்கதவை தாழிட்டு துாங்க சென்றார்.
நேற்று காலை வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். பக்கத்து வீட்டினர் கதவை தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று, மயங்கி விழுந்த முதியவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
முதியவர், 10 மணி நேரமாக வீட்டின் உள்ளே இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!