Load Image
Advertisement

தனியார் நிறுவனம் மூலம் டிரைவர், கண்டக்டர் பணியிடம் : டெண்டரை ரத்து செய்தது ஐகோர்ட்

 Driver conductor post by private company: ICourt canceled the tender    தனியார் நிறுவனம்  மூலம் டிரைவர், கண்டக்டர் பணியிடம் : டெண்டரை ரத்து செய்தது ஐகோர்ட்
ADVERTISEMENT
சென்னை:போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை நியமனம் செய்வது குறித்த டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை நியமனம் செய்வது தொடர்பாக கடந்த செப்.,மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது இந்த விவரம் குறித்து தொழிலாளர் நலத்துறை ஆய்வுக்கு எடுத்து தற்போது உள்ள நிலையே நீடிக்க அறிவுறுத்திய நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் இந்த டெண்டரை கோரியிருக்க கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது

ஆனால் தொழிலாளர் நலத்துறை ஆணையரின் அறிவுறுத்தலுக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனவும், பல ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வராததால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் நிரந்தர ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதையும் தடுக்கப்படும்.அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தெரிவித்து இருப்பதாவது:

போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை நியமனம் செய்வது என்பது அபாயகரமான சோதனை. இது ஊதிய முரண்பாடுக்கு வழிவகுக்கும். இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. தனியார் நிறுவனங்கள் மூலம் டிரைவர்கள் நியமித்தால் விபத்து ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். மேலும் மாநகர போக்குவரத்து கழகம் மட்டுமல்லாது அனைத்து அரசு போக்குவரத்து கழகத்திலும் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர், மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் காலி பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். இவ்வாறு தனது தீர்ப்பில் தெரிவித்து உள்ளார்.


வாசகர் கருத்து (11)

  • Hari - chennai,இந்தியா

    முதல்வர் பதவியையே அவுட் சோர்ஸ் விடடாச்சு ( கிருத்துவ தேவாலயம் நிர்வாகம் தான் அதை எடுத்து நடத்துகிறார்கள்)இப்போது கண்டக்டர் விடுவதால் என்ன நஷ்டம்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அந்த 'தனியார் நிறுவனங்கள்' முதலாளிகள் யார் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆம், ஆட்சியில் அமைச்சர்களாக உள்ள ஒரு சிலரின் சொந்தங்களாக அவர்கள் இருக்கலாம். டெண்டரை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நன்றி.

  • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    DMK tried their best to make money by this stupid SCIENTIFIC வாய், fortunately HC rejected this proposal.

  • பைரவர் சம்பத் குமார் -

    1). திராவிட மாடல் அரசிடம் சரியான சம்பளம் கொடுத்து ஆள் எடுத்து பணியில் அமர்த்த காசு உண்மையில் இல்லை.2). அதனால்தான் குறைந்த சம்பளத்தில் பிரைவேட் கான்ட்ராக்டர்கள் மூலம் ஆள் எடுக்கிறார்கள்.3). கூடிய விரைவில் கேரளா போல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்? யார் கண்டது?

  • panneer selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    I do not agree with High Court judgement . It nearly confirms that running a bus service is the fundamental duty of government and all norms are to be followed . Even army does not follow job reservation and they do subcontract various their activities to third party contractors. If you follow this judgement , government bus coroporation will be untruy & fatty and unviable , thanks to interference of militant union promoted by political parties .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்