லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை:ஆர்.டி.ஓ., மற்றும் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கடந்த, 9ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றினர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் , மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி மற்றும் இடைத்தரகர்களிடம் விசாரித்தனர்.
இந்நிலையில், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துவட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.உடுமலை ஆர்.டி.ஓ., நாகராஜ், பொள்ளாச்சி பொறுப்பு ஆர்.டி.ஓ., வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!