கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் ‛‛யங் இந்தியா'' நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டது தொடர்பாகவும், ஏ.ஜே.எல்.பங்குதாரர்கள் ஒப்புதல் பெறப்படாதது குறித்தும் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையாக கூறப்படும் ஏ.ஜே.எல். எனப்படும் அசோசியேட் ஜெர்னல் லிமிடெட், யங் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மீதான பண மோசடி வழக்கில் ரூ. 751.09 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (17)
ஊழலில் திமுகவிற்கு சளைத்தவர்கள் இல்லை காங்கிரஸ்காரர்கள்
ஓவியன் சார், 2G 1 ,70 ,000 கோடி மறந்து போச்சா? ஒரே ஒரு இடத்துல மட்டும் 760 கோடி. மற்ற நூற்றுக்கணக்கான இடங்களை சேர்த்தா பல பல ஆயிரக்கணக்கான கோடி. ஊழல் விஷயத்தில் காங்கிரஸ் ஒரு பல்கலை கழகம் [கழகம் என்றால் சூதாடுபவர்கள் இடம் - திருவள்ளுவர்]. அது சரியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் என்றாலே ஊழல் நாத்தம், தாங்கல.
இரு நிறுவனங்களின் அடிமனை நிலங்கள் அரசால் இலவசமாக ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டதாக😗 செய்தி. ஆனால் அவ்விடத்திலுள்ள கட்டிடங்கள் வேறு பயன்பாட்டுக்கு வாடகை மற்றும் லீசுக்கு விடப்பட்டன என்கிறார்கள்.
காங்கிரஸ் தொண்டர்களால் அவர்களின் பணத்தால் உருவான இந்த பத்திரிகை மிகவும் அராஜகமாக சர்வாதிகார தோரணையில் நேரு குடும்பத்தின் சொத்தாக மாற்றப்பட்டது. வாழ்க சுப்பிரமணிய சுவாமி. அதே மாதிரி திமுக தொண்டர்களின் பணத்தால் உருணானதாக சொல்லப்படும் அறிவாலயம் எப்போது மீட்கப்படுமோ.
ஆமாம் அந்த ஹைதெராபாத் -based Deccan Chronicle முதலாளிகளின் வங்கி ஊழல் வழக்கு என்னவாயிற்று? அவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? மக்கள் மறந்தே போயிருப்பார்கள் அந்த வழக்கை பற்றி.