Load Image
Advertisement

நகராட்சியில் ரூ. 1.56 லட்சம் பறிமுதல்: மூவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

 In the municipality Rs. 1.56 lakh seized: Anti-bribery police interrogating three    நகராட்சியில் ரூ. 1.56 லட்சம் பறிமுதல்: மூவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
ADVERTISEMENT
கூடலூர்: கூடலூர் நகராட்சியில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு, பணி மேற்பார்வையாளர் உள்ளிட்ட மூவரிடமிருந்து கணக்கில் வராத 1.56 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்து விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார் இன்று, கூடலூர் நகராட்சியில், திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், பணி மேற்பார்வையாளர் ஆல்துரை, 53, தற்காலிக பணியாளர் கிருஷ்ணவிஜயன், 45, ஓட்டுநர் கிருஷ்ணபிரபு, 30, ஆகியோரிடமிருந்து, கணக்கில் வராத, 1.56 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இத்தொகை குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் கூறுகையில், 'மூவரிடமிருந்து கணக்கில் வராத 1.56 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.


வாசகர் கருத்து (1)

  • K Sukumar - Nagpur,இந்தியா

    Terminat these persons and find out main office bearers and same people property is take under surveillance for CBI enquiry.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்