ADVERTISEMENT
புதுடில்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு டிச.,01-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என பா.ஜ.,வின் முக்கியமான தேர்தல் அறிவிப்பாகும். இதையடுத்து நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய சட்ட கமிஷன் பல்வேறு தரப்பில் கருத்து கேட்டுள்ளது.
நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான உரிமைகள் கிடைக்கும் வகையில், பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை விசாரணைக்கு ஏற்பதாக கூறியுள்ள டில்லி உயர்நீதிமன்றம், இது, மற்ற வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கப்படும் என, கூறியுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கு வரும் டிச.,01-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாசகர் கருத்து (2)
பொது சிவில் சட்டத்திற்கு அனுமதி வழங்கி விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
சபாஷ்! இது சரியான தருணம்.