அ.தி.மு.க, மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் இன்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பழனிசாமி கூறியது, வட மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் பூத் கமிட்டி பணிகளை டிச.03-ம் தேதிக்குள் முடித்துவிட்டு ஜனவரி மாதம் தேர்தல் பணிகளை துவக்க வேண்டும். பொங்கல் பண்டிகை நிறைவுற்றதும் தமிழகம் முழுதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
பழனிசாமி உடன் விஜயபாஸ்கர் ஆலோசனை
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த உடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (16)
சுற்றுப்பயணம் எடுபடாது. பாதயாத்திரை போங்க. அதான் இப்போ டிரெண்டிங்.
பழனிக்கே காவடி எடுத்தாலும் இந்த பழனிச்சாமிக்கு விமோசனம் கிடையாது. திருநீறு வைத்ததால் தான் எங்கேயோ கிடந்த அவரை இறைவன் முதல்வர் ஆக்கினார். ஓட்டு பிச்சைக்காக திருநீறை அழித்த அவர் இணின்தன்னுடைய இடத்துக்கு தானாக சென்று விடுவார்.
திருநீற்றை அழித்துவிட்டு முழு திராவிடனாகிய எடப்ஸ்க்கு கண்டிப்பாக அதிக எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். தைரியமாக தீம்காவிலுள்ள அதிருப்தி எம்எல்ஏ/மந்திரிகளை ஆதீம்காவில் இணைத்து தீம்காவையே ஆட்சியை விட்ட நீக்க முடியும் - ஆனால் விசுவாசம் காரணமாக எடப்ஸ் அதையெல்லாம் செய்ய மாட்டார்.
அடுத்ததாக திமுகவினர் எப்போது நடை பயணம் தொடங்குகிறது. ஸ்டாலின், உதை சேர்த்து நடைபயணம் போகலாம்.
சுத்துப் பயணம் சுத்தாத பயணம் என்று எப்படி போனாலும் ஒண்ணும் நடக்காது.