அறிவியல் ஆயிரம்:யாருக்கு வாழ்நாள் அதிகம்
அறிவியல் ஆயிரம்
யாருக்கு வாழ்நாள் அதிகம்
அமெரிக்காவில் ஆண்களை விட பெண்களின் வாழ்நாள் சராசரி 5.8 ஆண்டுகள் அதிகமாக உள்ளது என கலிபோர்னியா பல்கலை ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்நாட்டில் 1996க்குப் பின் பாலின வித்தியாசம் அதிகரித்துள்ளது. பாலின வித்தியாசம் அதிகரிப்புக்கு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த காரணங்களாக நீரிழிவு பாதிப்பு, இதய பாதிப்பு, தற்கொலை, கொலை போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்பு
உள்ளன. 2019, 2020ல் ஆண்கள் உயிரிழப்பு 20.1%, பெண்கள் உயிரிழப்பு 16.9% இருந்தது.
தகவல் சுரங்கம்
நீளமான கால்வாய்
உலகின் நீளமான விவசாய நீர்பாசன கால்வாய் துர்க்மெனிஸ்தானில் உள்ளது. இதன் பெயர் கார்கும் கால்வாய். இதன் கட்டுமானப்பணி 1954ல் தொடங்கி 1988ல் நிறைவடைந்தது. இதன் நீளம் 1375 கி.மீ. இது ஆண்டுக்கு 13 கன கி.மீ., தண்ணீரை அமு தர்யா ஆற்றில் இருந்து காராகும் பாலைவனத்துக்கு கொண்டு செல்கிறது. இக்கால்வாய் நீரை பயன்படுத்தி பருத்தி விவசாயம் நடக்கிறது. துர்க்மெனிஸ்தானின் விவசாய உற்பத்திக்கு இக்கால்வாய் முக்கிய பங்காற்றுகிறது. தலைநகர் அசுகாபத்துக்கு தண்ணீர் வழங்கும் முக்கிய கால்வாய் இதுதான்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!