ADVERTISEMENT
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை யாரும் நம்பப்போவதில்லை என பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.500க்கு சமையல் காஸ் சிலிண்டர், அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.
காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை யாரும் நம்பப்போவதில்லை. ஊழல், அட்டூழியங்கள், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு மட்டுமே காங்கிரசால் உத்தரவாதம் அளிக்க முடியும். அவர்கள் வாக்குறுதி அளிப்பதாக இருந்தால், ஏற்கனவே பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை தான் அளிக்க முடியும். தேசமும், ராஜஸ்தான் மாநிலமும் பிரதமர் மோடியுடன் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
மோடி அமித்ஷா நட்டா என பாஜக வின் அனைத்து தலைகளும் காங்கிரசை தொடர்ந்து அட்டாக் செய்வதில் இருந்தே தெரிகிறது ராஜஸ்தானில் காங்கிரஸ் வரலாற்று வெற்றியை பதிவு செய்யுமென்று.
காங்கிரஸ் என்றாலே பொய் தான்.
ஹா ஹா.. கையிலே எல்லாருக்கும் ஆளுக்கு பைனஞ்சி லட்சம் தருவதற்கு பணம் வெச்சிக்கிட்டு பேசுறார்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஆமா 15 லட்சம், கருப்பு பண ஒழிப்பு, இதுல எல்லாம் வாக்குத்தந்து நிறைவேற்ற தவறிய கட்சியையும் தலைவரையும் தானே நம்பனும்.