தெலுங்கானா மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மதுபானம், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக்கூடாது எனக் குரல் கொடுத்த மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று. அவை ஜி.எஸ்.டிக்குள் வந்திருந்தால் நியாயமான விலையில் கிடைத்திருக்கும். வருவாய் எப்படியும் மாநிலத்துக்குதான் வரப்போகிறது.
2014ல் மாநிலம் உருவாக்கப்படும் போது அதிக வருவாய் கொண்ட மாநிலமாக தெலுங்கானா இருந்தது. இப்போது வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, தெலுங்கானா மாநிலத்தை அதிக கடன் சுமையில் சந்திரசேகர ராவ் மூழ்கடித்துள்ளார். அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகள் வரை இந்தக் கடனை சுமக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
வாசகர் கருத்து (13)
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்களை பத்தி இந்தம்மா வாயே திற்க்கமாட்டாங்க.
இந்தியாவின் கடனை 50 லட்சம் கோடியில் இருந்து மூன்று மடங்காக 150 லட்சம் கோடியாக கடன்கார நாடாக ஆக்கிய பாஜாக்கா நிதித்துறை அமைச்சர், இதைப்பத்தி எந்த தைரியத்தில் பேசுகிறார்?
மேடம், தமிழகத்தை ஒருவர் 'டாஸ்மாக் சரக்கு சமுத்திரத்தில்' மூழ்கடித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய பிரதாபங்களையும் மக்களுக்கு புரியும்படி கூறுங்கள்.
தியாகி நிர்மலா அவர்களே நீங்கள் செய்தது என்ன ? ஐம்பது லட்சம் கோடியை நூற்று ஐம்பது லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவை இல்லை பாரதத்தை கடனில் மூழ்கடிக்க வில்லையா? அப்போதும் விசுவாசமாக பெரும் நன்கொடை தரும் பெரும் பணக்காரர்களுக்கு அதானி உள்பட கடன் தள்ளுபடி செய்யவில்லையா ? எதோ தியாகம் செய்ததுபோல பேசுகிறீர்கள், மக்களுக்கு ஏன் விசுவாசமாக இல்லை ? பெட்ரோல் டீசல் மற்றும் காஸ் விலையை குறைக்காமல் மக்களை ஏமாற்றுகிறீர்களே ? உலகத்திலே இங்குதான் அதிக விலை தெரியுமா? ஒரு பெண்ணாக இருந்து குடும்ப பெண்களின் கண்ணீரை வரவழைப்பது நியாயமா? கடைசியாக ஒன்று , நீங்கள் தேர்தலில் நிற்க முடியுமா ?, நின்று ஜெயித்து காட்ட முடியுமா ? சவடால் வேண்டாம் , நிரூபியுங்கள் .
பெட்ரோல் விலை ஹாங் காங்கில் தான் உலகிலேயே அதிகம். மிக அதிக விலை உள்ள நாடுகளில் முதல் பத்தில் கூட இல்லை. இந்தியாவில் லிட்டருக்கு டாலர் ஒன்று பதினாறு சென்ட் தான். அமெரிக்காவை விட மலிவு விலையில் இந்தியாவில் கிடைக்கிறது. மேலும் இதே விலை ஒரு வருடத்துக்கும் மேல் நீடிக்கிறது.
அதிக வரி குடுக்கும் மாநிலங்களுக்கு கொஞ்சமாவது சலுகை தாங்கனு கேக்குறோம்,