ADVERTISEMENT
சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் தோற்ற இந்திய அணி வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடியின் வீடியோவை தமிழாக்கம் செய்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் மனமுடைந்த இந்திய வீரர்களை டிரசிங் ரூமிற்கு நேரில் சென்று சந்தித்த பிரதமர் மோடி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு ஆறுதல் கூறி, ஊக்கமளித்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதன் உரையாடல்களை தமிழாக்கம் செய்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், ''நீங்க எல்லாரும் மொத்தமா 10 ஆட்டங்களையும் ஜெயிச்சு வந்துருக்கீங்க.. விடுங்க தம்பிகளா, நாடே உங்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறது. கவலைப்படாதீங்க.. நீங்கள் எல்லாரும் சிறப்பாக முயற்சி செய்தீர்கள்.. விடுங்க பார்த்துக்கலாம்.. இதுபோல நடக்கும், எல்லாரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள்'' என வீரர்களிடம் பிரதமர் மோடி பேசி ஊக்கப்படுத்தினார்.
வாசகர் கருத்து (15)
பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் இவருக்கு யார் ஆறுதல் சொல்லப் போகிறார்கள்?
மோடியை போன்று ஒரு பிரதமர் நமக்கு கிடைப்பது அரிது.
நம்ம விடியல் பிரதமர் ஆனால் இந்த பிரச்சனை வரவே வராது அவரே கப் பண்ணி கொடுத்து விடுவார் உண்மையான கிரிக்கெட் விளையாட்டு வீரர் யார் என்று கூட தெரியாதவர்
Very few leaders can think like Modi to boost the morale when efforts fail to yield results. We saw during Chandrayaan-2 when Sivan cried, Modi consoled. Its a natural response.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அங்கே 41 பேர் உயிருக்கு போராடிக்கிட்டிருக்காங்க. இங்கே ஒருத்தர் ஃபிடில் வாசிச்சு ஆறுதல்.