Load Image
Advertisement

‛‛காங்கிரசுக்கு ஒரே ஒரு நோக்கம் தான்: அமித்ஷா சொல்வது என்ன?

Rajasthan Elections 2023: Ashok gehlot: Congress has only one objective: What does Amit Shah say?    ‛‛காங்கிரசுக்கு ஒரே ஒரு நோக்கம் தான்: அமித்ஷா சொல்வது என்ன?
ADVERTISEMENT
ஜெய்ப்பூர்: ‛‛காங்கிரசுக்கு ஒரே ஒரு நோக்கம். வாரிசு அரசியல் தான்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராஜஸ்தானின் 40 லட்சம் இளைஞர்களை கெலாட் அரசு ஏமாற்றியுள்ளது. இங்கு பாஜ., ஆட்சி அமைத்தால் ஊழலில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைப்போம்.

காங்கிரஸ் கட்சியும், அசோக் கெலாட் அரசும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது. தேர்தல் வினாத்தாள் கசிவு நடந்த பிறகும் அசோக் கெலாட் எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார். அசோக் கெலாட் மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறார்.

காங்கிரசுக்கு ஒரே ஒரே நோக்கம். வாரிசு அரசியல் தான். சோனியா தனது மகன் ராகுலை பிரதமராக்க விரும்புகிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், அட்டூழியங்கள் நடக்கின்றன. அவர்களால் ஒருபோதும் ராஜஸ்தானை வளர்க்க முடியாது. பிரதமர் மோடியால் மட்டுமே ராஜஸ்தான் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்த முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


வாசகர் கருத்து (6)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இப்பொழுது காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம், எப்படியாவது ஆட்சியை பிடித்து, பத்து வருடங்களாக விட்டதை மொத்தமாக சுருட்டவேண்டும் என்கிற நோக்கம்தான்.

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    உங்கள் மகன் ஜெய் ஷா மட்டும் என்ன கிரிக்கட் பிளேயர் ? எத்தனை மேட்சுகள் ஆடினார் ? கிரிக்கெட் போர்டு தலைவர் ஆனது எப்படி ? இது வாரிசு அரசியல் இல்லையா? உங்கள் பின்னால் இருக்கும் வாரிசு அரசியல்களை பட்டியல் போடலாமா? உங்கள் பிரச்சாரம் ரொம்ப பழசு நைனா? போயி மணிப்பூர் என்ன ஆச்சு என்று பாருங்கள் , இன்னும் அங்கு கலவரம்தான் .

    • ஆரூர் ரங் - ,

      பிசிசிஐ ஒரு தனியார் அமைப்பு. அரசின் தலையீடு கிடையாது 2 .இதற்கு முன் எத்தனை வீரர்கள் பிசிசிஐ தலைவர்களா இருந்துள்ளனர்😛? 90 சதவீதம் பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே.3 ஒருவர் பசியின் உறவினர். இன்னொருவர் திமுக வின் பணமூட்டை .சீனு.

  • பேசும் தமிழன் -

    // கான் கிராஸ் கட்சிக்கு ஒரே நோக்கம் தான் //... அது நாட்டை கொள்ளை அடிப்பது மட்டுமெ என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் !!!

  • Vilva Nathan -

    0 ....

  • குமரி குருவி -

    காங்கிரஸ் கட்சியின் நோக்கம்வாரிசு அரசியலாக இருக்கலாம்ஆனால் வாரிசான ராகுலைகோமாளியாக்கி விட்டார்களே இண்டியா கூட்டணி நண்பர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்